Monday, 11 April 2011


குறைந்த செலவில் MBA, M.E/ M.Tech , MCA  படிக்க TANCET நுழைவு தேர்வு

     தமிழகத்தில் உள்ள  அரசு கல்லூரிகள், அண்ணால் பல்கலை கழககங்கள், அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில்  MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்க அண்ணா பல்கலை கழகம் வருடம் தோறும் TANCET என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இந்த தேர்வை எழுதி, நல்ல மதிப்பெண் எடுப்பதின் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் MBA/ MCA/ M.E/ M.Tech/ M.Arch./ M.Plan படிக்கலாம் . 
தேர்வை பற்றிய விபரங்கள் (அட்டாச்மென்டில் முழு விபரமும் உள்ளது)
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :    தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழகங்கள், மற்றும் மாவட்ட வாரியாக கிடைக்கும் இடங்களின் விபரம் அட்டாச்மென்டில் உள்ளது

ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய :
www.annauniv.edu/tancet2011 (ஏப்ரல் - 1 முதல் ஏப்ரல் 25 வரை )


விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 27/04/2011
தேர்வு கட்டணம் : ரூ.300

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :  The Secretary, TANCET Examination Centre, Anna University, Chennai - 600 025.

உடனடி விண்ணப்பம் (Spot Registration):  தமிழகத்தில் உள்ள எல்லா அண்ணா பல்கலை கழங்களில் விண்ணப்பம் பெற்று உடனடியாக ஹால் டிக்கெட் (Hall Ticket ) பெறலாம். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, சாதி சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதிகள் : 
M.E/M.Tech -  29/05/2011 (காலை )
MBA -  28/05/2011 ( காலை )
MCA - 28/05/2011 (மாலை)
M.Arch/M.Plan - 29/05/2011 (காலை )

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : ஜூன் 3-வது வாரம்
    
M.E/M.Tech  படிக்க தகுதிகள் : B.E/B.Tech படித்தவர்கள், A.I.M.E, B.Pharm படித்தவர்கள். M.Sc. (physics/chemistry/Maths/Geography/Geology/Electronics  etc....) படித்தவர்கள்.  இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MBA படிக்க தகுதிகள்  : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

MCA படிக்க தகுதிகள்  : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்தவர்கள். (+2 - ல் கணித பிரிவில் படித்து இருக்க வேண்டும், அல்லது பட்ட படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியல் படித்து இருக்க வேண்டும்). இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

M.Arch/M.Plan படிக்க தகுதிகள்   :  B.Arch அல்லது B.Plan படித்து இருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வை பற்றிய முழுவிபரங்களும் இந்த  www.annauniv.edu/tancet2011   இணையதளத்தில் உள்ளது.  மேலும் விபரங்கள் அறியவும், தேர்வை பற்றிய சந்தேகங்களுக்கும், தேர்விற்க்கு தயாரரும் வழிமுறைகள் பற்றி அறியவும் sithiqu.mtech@gmail.com  என்ற E  - மெயிலில் தொடர்பு கொள்ளவும்.

S.சித்தீக்.M.Tech

0 comments:

Post a Comment